வாணம் விட போகணுமின்னு
வண்டி ஏறி கண் அசந்தா
வானம் கூட்டிப் போயிருச்சே!
வழிப்பறியா ஆயிருச்சே!
விடுப்பு ரெண்டு எடுத்துக்கிட்டு,
உடுப்பு நாலு வாங்கிக்கிட்டு,
அடிச்சி புடிச்சி கெடச்ச வண்டி
வெடிச்சி வீணாப் போயிருச்சே!
ஆடுற ஆட்டத்துல
ஆனந்தமா தூங்கையில
அர மணி நேரத்துல
ஆட்டமெல்லாம் அடங்கிருச்சே!
ஆம்பளயா பொம்பளயா
அடையாளம் தெரியலயாம்!
அதுலயும் பாதி பேர்
ஆருன்னே புரியலயாம்!
எங்களத் திரியாக்கி
வண்டிய வெடியாக்கிட்டியே,
எமதருமராசா! பட்டாசுன்னா
உனக்கு அம்புட்டு இஷ்டமாய்யா?
என்ன பொலம்பி என்ன செய்ய!
எங்க போயி நாஞ்சொல்ல!
எண்ண குளியல் போடும் முன்ன
எண்ணயில பொரிச்சிட்டியே!
கஷ்டத்தப் போக்க
நஷ்ட ஈடு தாராங்களாம்!
போன உசுர 'ஜப்பார்' தருவாரா,
அவுங்க அப்பாரு தருவாரா?
No comments:
Post a Comment