07 October 2010

படித்ததில் பிடித்தது..

நன்றி: மீனாக்ஷி பட்டாபிராமன் (அக்டோபர் '10 மங்கையர் மலரில் அச்சேறியது)

(ஒரு நல்ல கற்பனையே அன்றி,  யார் மனதையும் புண் படுத்துவது எண்ணம் அல்ல)

இடம்: பழமுதிர்ச் சோலை
உரையாடல்: அவ்வை பாட்டியும் முருகப் பெருமானும்

முருகன்: அவ்வையே! ஆங்கில மேதை ஷேக்ஸ்பியரையும் என்னையும் ஒப்பிடுக.

அவ்வை: அய்யனே! ஷேக்ஸ்பியர் பிறந்தது ஸ்ட்ராட்போர்ட் ஆன் ஏவான் (Strartford on Avon). நீ சரவண பவன்.

உனக்கு வேல் கையிலே. அவருக்கு பெயரிலே (Shake'spear'e)!

அவர் நடிகர்களுக்கு அடி எடுத்துக் கொடுத்தார் (Prompter). நீ அடியவர்களுக்கு (அருணகிரிநாதர், முத்துசுவாமி தீட்சிதர்) அடியெடுத்துக் கொடுத்தாய்.

அவர் காதலை நாடகத்தில் வைத்தார் (Romeo & Juliet). நீ காதலுக்காக நாடகம் ஆடினாய் (வள்ளித் திருமணம்).

அவருக்கு 'Globe' (theatre) சொந்தம். உனக்கு இந்த 'Globe' (உலகமே) சொந்தம்.

அவர் 'Money'காக நாடகம் எழுதினார். நீ கனிக்காக நாடகம் ஆடினாய்.

அவரது சிறப்பு நாலு (Four great tragedies). உனது சிறப்பு ஆறு (ஆறுபடை).

அவர் உலகம் போற்றும் கவிஞர். நீ உலகம் சுற்றிய அழகன்.

No comments: