07 August 2009

இன்று போய் நாளை வா! (Bon Voyage!)

(இது, திருமணமாகி தன் கணவனிடம் சேர, வெளிநாடு செல்லும் என் தோழிக்காக நான் வரைந்த வாழ்த்து!)

சென்று வா தோழி
உலகம் சுற்றி வா!

நின்று திரும்பிப் பார்க்கிறேன்
இன்று தான் சந்தித்தது போல் இருந்தாலும்
எத்தனை வேக வேகமாய்
இத்துணை ஆண்டுகள் ஓடி விட்டன!

அன்று ஆரம்பித்த அரட்டைகள்
நன்றாய் என்றும் தொடரும்.
தொலைவால் தொலைந்து போகாது.
வலை இருக்கிறது. வா வம்படிக்கலாம்!

என்று திரும்புவாய் என்ற ஏக்கத்தோடு,
எல்லோரும் காத்திருப்போம் என்றாலும்
உளமார வாழ்த்தி அனுப்புகிறோம்,
உன் கண்ணாளனின் காதல் ரோஜா காத்திருக்கிறது.

சென்று வா தோழி!
உலகம் சுற்றி வா!

4 comments: