25 December 2014

Muzhudhaai Unarndhavar Yaaro - Lyrics (Tamil)

I was looking for the lyrics for the Sai Bhajan 'Muzhudhaai Unarndhavar Yaaro' popularized by MS amma. Since I could not find the same documented anywhere, I penned it down (in Thamizh).

Originally part of the multilingual album 'Sathya Sai Sangitanjali', this Behag based song, I understand, was composed and written by Athmanathan. This was later released as part of the compilation "Thamizhe Isayaai" featuring Thamizh compositions sung by MS Amma.



முழுதாய் உணர்ந்தவர் யாரோ? சாயி உன்னை
முழுதாய் உணர்ந்தவர் யாரோ?
பார்த்தனுக்கு கீதை சொன்ன பரந்தாமா, இங்கு
பாலனுக்கு பாடம் சொன்ன மாயம் என்னவோ! (முழுதாய்)

அங்கேயும் இங்கேயும் எங்கெங்கும் நிறைந்திருந்தும்,
அன்பர் மனதுக்குள்ளே அடங்கி ஒடுங்கும் உன்னை (முழுதாய்)

அம்மையாய் அப்பனாய் அம்மையப்பனுமாகி
இம்மையில் எனக்கும் இன்னருள் பொழியும் உன்னை (முழுதாய்)

கொண்டது எந்தனை கொடுத்தது உந்தனை
என்ன கணக்கோ இது ஏதும் புரியாது (முழுதாய்)