கண்ணயர், கனவு காண்
சன்னல்திற, சுவாசி!
கைதொடு, கண்துடை
தோள்தொடு, தலை கோது
கைபிடி, கரையிழு
செவிகொடு, சேர்த்தணை !
படி! படி !
பயன்படு, பகிர்
முயல் முண்டியடி
முடியும். முந்து.
முந்து. முன்னேறு
முடிந்தால் முன்னேற்று.
வழிபடு, தொழு
சேவி, நம்பு!!
கேள்! கேள்!
கல், கற்றுவி
வாழ்! வாழ விடு
வாழ்வி, வாழ்த்து
காதலி, கவிபுனை
கைபிடி, கைதொடு
காதலி, கைபிடி
கைதொடு, காதலி.
(சிந்தனை தொடரும் ....)